சன் சீ கப்பலுக்குள் கனேடிய படையினர் பிரவேசித்துள்ளனர்

சுமார் 500 இலங்கையர்கள் இருக்கலாம் என நம்பப்படும் எச் வி சன் சீ கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல்படையினர் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் செய்திசேவை ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் நாளை காலை பிரிட்டிஸ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த கப்பல் பசுபிக் சமுத்திரத்தை கடக்கும் போது அதிலுள்ள பலருக்கு காசநேய் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய வன்கூவர் சன் செய்திசேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் யாரென்ற விடயம் வெளியாகவில்லை.

இதேவேளை கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.