யாழில் இருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை சென்ற மூதாட்டி

யாழ்.நவாலியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்று கதிர்காம முருகனைத் தரிசித்து ஆடிவேல் விழாக் காட்சிகளைக் கண்டு களித்து வந்துள்ளார்.

நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த ஆண்டி சின்னம்மா என்ற இம்மூதாட்டி, கடந்த மே மாத நடுப்பகுதியில் யாழ் நவாலியிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக சென்றிருந்தார்,

இவருடன் இன்னும் சிலரும் இணைந்து கொண்டனர். இவர்கள் சென்றுகொன்டிருக்கையில் இராப்பொழுதில் வழியில் கண்ட ஆலயங்களில் உறங்கிவிட்டு மீண்டும் காலையில் நடக்கத் தொடங்கிவிடுவார்களாம். வெயிலின் களைப்பால் காட்டுப்பாதைகளின் மரநிழல்களின் கீழ் தங்கியிருந்தார்களாம், இவர்களைக் கண்ட சிலர் இவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்துதவியதாகவும் அம்மூதாட்டி தெரிவித்திருந்தார்.

இவ்வாறு 58 நாட்கள் நடந்துசென்று கதிர்காமத்தை சென்றடைந்த மூதாட்டி ஆடிவேல் திருவிழாவில் பங்குகொண்டு மீண்டும் யாழ் நவாலிக்கு வாகனத்தில் ஊரைச் சென்றடைந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.