கொழும்பு கொடாஞ்சேனை சுற்றி வளைப்பு, தமிழர்கள் மீண்டும் பதிவு

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியை நேற்று அதிகாலை பொலிஸார் சுற்றி வளைத்து, தமிழ்மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டனர். இது குறித்து கேள்வி எழுப்பிய சில தமிழர்களைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவசரகாலச்  சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நாங்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யவேண்டும் என சிலர் கேள்வி எழுப்பினர் என்றும் அதற்குப் பொலிஸார் வெளிநாடுகளிலுள்ள புலிகள் கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் எனத் தெரிவித்தனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.