சரத் பதவி நிலையைக் குறைக்க நீதிமன்றம் முடிவு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று முதலாவது இராணுவ குற்றவியல் நீதி மன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து அவருடைய இராணுவ பதவிகளின் நிலைகளை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என இராணுவ ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தது. எனினும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக ஜனாதிபதியிடம் தீர்ப்பு தொடர்பான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.