14-08-2010 அன்று பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு

சிறிலங்கா பேரினவாத அரசின் கொலை வெறித்தாண்டவத்தின் விமானக் குண்டுவீச்சுத்தாக்குதலில் பலியான வள்ளிபுனம் செஞ்சோலை பள்ளிச் சிறார்களின் 4 ஆம் ஆண்டு நினைவு சுமந்த அஞ்சலி நிகழ்வு 14-08-2010 அன்று பிரான்ஸ் ரொக்கத்தோப் பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சுகிர்தாவின் சகோதரன் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களின் திரு உருவப்படங்களிற்கு சுடரேற்றினார்.

அகவணக்கம், மலர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. சிறுவன் ஒருவனின் எழுச்சிப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிரான்ஸ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கவிதையும் இடம்பெற்றது.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. கொட்டும் மழைக்குமத்தியில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.