அரசியல் தீர்வு மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி

e0aeaae0aebfe0aeb0e0aea3e0aebee0aeaae0af8d-e0aeaee0af81e0ae95e0aeb0e0af8de0ae9ce0aebfஇலங்கை பிரச்சனைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண்பது சாத்தியமாகாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
 
இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளின் இடையேயான போரில் அப்பாவித் தமிழர்கள் சிக்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் நடைபெற்று வரும் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிபர் ராஜபக்சேவிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி வலியுறுத்தினார். 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிம் பேசிய பிரணாப் முகர்ஜி, போரில் அப்பாவித் தமிழர்கள் பலியாவது கவலையளிக்கிறது.  இலங்கை பிரச்சனைக்கு இராணுவ ரீதியாக தீர்வுகாண முடியாது. அரசியல் தீர்வு மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு என்றார்.

விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நடக்கும் போரில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தமிழர்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொள்கிறது. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.