கப்பலிற் கனடா வந்தடைந்தோரின் தற்போதைய நிலை: – கனடியத் தமிழர் பேரவை

கப்பலில் ஏதிலிகளாய் கனடா வந்தடைதேரரில் குழந்தைகளையும் பெண்களையும் நேரில் சந்திக்கக் கனடியத் தமிழர் பேரவை விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று மலை குழந்தைகளோடு பயணம் செய்திராத 35 பெண்களைக் கனடியத் தமிழர் பேரவை சந்தித்துப் பேசியது.

ஏனைய பெண்கள் தங்கள் குழந்தைகளோடு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்ச் சமுகத்தைச் சார்ந்தோரைச் சந்தித்த பின்னர் இப் பெண்கள் பயமற்றவராயும் ஓரளவு மன அமைதியுடனும் காணப்பட்டனர்.

கனடியத் தமிழர் பேரவையானது அவர்களது உரிமைகள் மற்றும் தொடரவிருக்கும் செயற்பாடுகள் பற்றி விளக்கியதுடன் தொடர்ந்து எவ்வாறு அவர்களது விசாரணைகள் நடைபெறும் போன்ற தெளிவான விபரங்களடங்கிய, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கைப்படிகளையும் வழங்கினர்.

இவர்கள் தங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உடனடியாகத் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த ஏதுவாக ஒவ்வொருவரது கணக்கிலும் (தடுப்பு முகாமில் இவர்களுக்கென அரசு ஏற்படுத்தியிருக்கும் கணக்கு) சிறு தொகைப் பணமும் வைப்பிடப்பட்டது.

கடற்பயணத்தின் போது ஒரு ஆண் இறந்துள்ளதாகக் கனடியத் தமிழர் பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கனடா வந்தடைந்த ஏதிலிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளோடு உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என வௌ;வேறு இடங்களிற் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பெண்களும் கனடிய சிறாரின் சட்டங்களுக்கமைந்தே இவ்விடங்களிற் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று 15.08.2010, கப்பலில் வந்திறங்கிய அனைவரையும் கனடியத் தமிழர் பேரவை நேரடியாகச் சந்திக்கவுள்ளது.

புதிய தகவல்களும் செய்திகளும் கிடைக்கப்பெற்றவுடன் கனடியத் தமிழர் பேரவை அவற்றை உடனுக்குடன் வழங்கக் காத்திருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கும் செவ்விகளுக்கும்: 416 240 0078

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.