கப்பலில் உயிரிழந்துள்ளார் – கனடா

கனடாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கப்பலிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 

கனடாவை நோக்கி பயணித்த வந்த கப்பலில் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
37 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளதாகவும் அவரது மனைவியும் பிள்ளைகளும் இலங்கையில் வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நோய் காரணமாக குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
உயிரிழந்தவரின் சடலம் கடலில் எறியப்பட்டதாக சக புகலிடக் கோரிக்கையாளர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
 
எம்.வீ.சன் கப்பலில் மொத்தமாக 490 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதில் 350 ஆண்களும், 50 பெண்களும் 50 சிறுவர் சிறுமியரும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பால் குடிக்கும் சிசுக்கள் முதல் 70 வயது முதியவர்கள் வரையில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சிறிய கப்பல் ஒன்றில் பாரியளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் எவ்வித அனர்த்தமும் இன்றி பயணித்தமை ஆச்சரியமளிப்பதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
புகலிடக் கோரிக்கையாளர்களின் உடல் நிலை சாதகமாகக் காணப்படுவதாகவும் ஆறு பேர் மட்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.