டென்மார்க்கில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2010
-
இவ் விடயம் 16. 08. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 19:33க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா சனிக்கிழமை (13.08.2010) ஓகூஸ் நகரில் பெருந்திரளான மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.எமது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
காலை 10மணிக்கு ஆரம்பமாகிய விளையாட்டுக்கள் மாலை 8 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது உளமகிழ்வையும், உடல்நலத்தையும் தரும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர்.
இறுதியாக வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி, விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.























































