விடுதலைப்புலிகளை வேட்டையாடுவது போல ப்ரெஞ்சு கம்பனியின் வீடியோ கேம்

உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுமால் போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம்.

எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்கவேண்டும் ஏன் உலகமே இந்த கம்பனிகளின் பொருட்களை புறக்கணிக்க கோரவேண்டும். கம்பனியின் பெயரும் வீடியோ கேம் இன் பெயரும் முறையே Ubisoft Ghost Recon Predator ஆகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.