இந்தியத் தூதர் அடுத்த மாதம் வருகிறாராம்

இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய அரசின் மூத்த உறுப்பினர் அடுத்த மாதம் இலங்கை செல்வார் என்று மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கிய நிவாரணம் உரிய முறையில் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அதைக் கண்காணிக்கவும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்யவும் ஒரு பிரதிநிதியை அனுப்பலாம் என்று பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்திருந்தார். இதை மன்மோகன் சிங்கும் ஏற்றுக் கொண்டார். இந் நிலையில் நிருபமா ராவ் அது குறித்து விவாதிக்க சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்துள்ளார்.

அப்போது ஈழத் தமிழர்கள் பிரச்சனை தவிர, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராவ், அடுத்த மாதம் இந்திய அரசின் மூத்த பிரதிநிதி இலங்கை செல்வார் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.