05-09-2010: கனடாவில் தமிழீழ வெற்றிகிண்ணம்

கனடிய மண்ணில் 2ஆவது ஆண்டுத் தமிழீழக் வெற்றிக்கிண்ண கால்பந்து போட்டிகள் செப்ரெம்பர் 5ஆம் நாள், நடைபெறவுள்ளது.

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுக் குழு கூடுதல் எதிர்பார்ப்போடு அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் 2ஆவது ஆண்டுத் தமிழீழக் கிண்ணத்தினை ஞாயிற்றுக்கிழமை 5ஆம் நாள் L’Amoreaux விளையாட்டு அரங்கில் நடாத்த உள்ளது. போட்டிகள் காலை 8:00 மணிக்கு தொடக்க நிகழ்ச்சிகளோடு தொடங்கி மாலை முடிவு நிகழ்ச்சிகளோடு நிறைவுபெறும்.

கனடிய தமிழ் இளையோர் ஒன்றியம், கனடியத் தமிழர் விளையாட்டு கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோருடைய திறமையை வெளிக்காட்டவும், அவர்களிடையே நல்ல போட்டி மனப்பாங்கு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், தமிழீழக்கிண்ணம் – உதைபந்தாட்ட போட்டிகளை நிகழ்த்துகின்றது.

இவ்விழாவில் திறமையை வெளிக்காட்டிய இளையோரை முதன்மைப்படுத்தி பரிசுகளும், கௌரவிப்புகளும் இடம்பெறும். கடந்த ஆண்டு இந்நிகழ்வு, 35 உதைபந்தாட்டக் குழுக்களையும் நூற்றுக்கணக்கான உதைபந்தாட்ட ஆதரவாளர்களையும், அனுசரணையாளர்களையும், தமிழ் மற்றும் தமிழ் அல்லாத சமுகம் சார்ந்த மக்களையும் கொண்டுவந்திருந்தது.

இவ்வாண்டுப் போட்டிகள் 6 அகவைக்குட்பட்ட, 8 அகவைக்குட்பட்ட, 10 அகவைக்குட்பட்ட, 12 அகவைக்குட்பட்ட, 14 அகவைக்குட்பட்ட, 16 அகவைக்குட்பட்ட, மற்றும் அனைத்து ஆண்களுக்கான பிரிவுகளுகிடையே இடம்பெறும்.

அனைத்து போட்டிகளும் கனடியத் தமிழர் விளையாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப விளையாடப்படும். குழுக்கள் பதிவுக்கான முடிவு நாள் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 28, 2010. விதிவிலக்குக்கு இடமளிக்கப்படமாட்டாது.

குழுப் பதிவுக்கும், தகவல் பெறவும், தொடர்புகொள்ளவும்:

647-888-7405
647-274-9366
மின்னஞ்சல்: athletics@ctya.org

கடந்த ஆண்டின் வெற்றிக்குழுக்கள்:

Under 8
Seawaves Sports Club

Under 10
Seawaves Sports Club

Under 12
Titans West Sports Club

Under 14
Jarvis Sports Club

Under 16
Jarvis Sports Club

Open Men
Eelam Challengers Soccer Club

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.