பிரபாகரன் ஆயுதம் ஏந்த காரணம் சிங்கள பயங்கரவாதமே – மங்கள முனசிங்க

யார் பயங்கரவாதத்தை ஆரம்பித்தார்கள்? நாங்கள்தான்; நாங்கள் அவர்களைக்கொன்றோம், அவர்கள் மனைவிகளை கொன்றோம், பிள்ளைகளை கொன்றோம், அவர்கள் வீடுகளை உடைத்தோம், கடைகளை சூறையாக்கினோம். இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர்.
பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. இவ்வாறு கூறியுள்ளார் மங்கள முனசிங்க.

தெற்கில் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் செயற்பட்டனர்.

இதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச் சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன் ஆயுதங்களுடன் களமிறங்கினார். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியவருமாகிய மங்கள முனசிங்க.
தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் மங்கள முனசிங்க நேற்றுமுன்தினம் சாட்சி யம் அளித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
தேசநலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல் வாதிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட் டனர். இதுவே 1983ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு வித்தானது.

கடந்த கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வராமைக்கு பரஸ்பர நம்பக்கையின்மையே காரணம். இந்தப் போரை இனப் போராகவோ, தீவிர வாதத்துக்கு எதிரான போராகவோ கருதமுடியாது.

இது முற்றுமுழுதான அரசியல்நோக் கம் கொண்ட போராகும். முன்பொரு காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர், ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் சுதந்திரம்பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள் பொறாமையால் உந்தப்பட்டனர்.
தேசநலனை பற்றிய எண்ணம் எதுவு மின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த எண்ணம் சிங்கள தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது. இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.
தீவிரவாதம் காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றமையை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர்.

அவர்களின் அரசியல் பக்குவம் குறைந்து போனது.
இதன் பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளையமுதாயம் சோர்வுடன் உற்சாகமின்றிக் காணப்பட் டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல் கட்சிகளையும், தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன் ஆயுதங்களுடன் களமிறங்கினார்.

வடக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்கு மானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அனைத்துமே தலைகீழாகி இருந்தன.
தேசநலனில் அக்கறையின்றி செயற் படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள் விட்டுவிட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க முன்வரவேண்டும்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.