கொள்கையினை மாற்றினால் ரணிலுடன் சேர்ந்து செயற்பட தயார் – பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளுமானால் ஜனநாயக தேசிய முன்னணி அதனுடன் இணைந்து கொள்வது குறித்து ஆலோசிக்கும் என சரத் பொன்சேகா சற்று முன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இக்கருத்தை அவர் வெளியிட்டார்.

நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பு குறித்துத் தாம் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் எந்நேரமும் தாம் சிறைவாசம் அனுபவிக்க நேரலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.