இந்திய வெளியுறவு அமைச்சர் அக்டோபரில் கொழும்பிற்கு விஜயம், தமிழர் பிரச்சினை குறித்து தீர்வு

இந்திய வெளியுறவு அமைச்சஎ எஸ்.எம். கிருஸ்ணா வருகின்ர அக்டோபர் மாதம் கொழும்பு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கலைஞர் கருணா நிதி அவர்களை சந்தித்த நிருபாமா இது தொடர்பில் ஆலோசனை பெற்றதாகவும் அந்த அடிப்படயிலேயே கிருஸ்ணா செல்லவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆனால் முக்கியமான ஒரு இந்திய அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவிருப்பதாகவும் வெளியுறவு செயலராக அது இருக்காது எனவும் வேறொரு செய்தி தெரிவிக்கின்றது.

கொழும்பினுடனான சீன மற்றும் பல நாட்டு உறவுகளை எச்சரிக்கும் பொருட்டு இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு இந்தியா அலைவதாக சில செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. கிருஸ்ணா வரும் நேரம் அவர் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்திய உப தூதரகத்தை திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.