த எகொனொமிஸ்ற் சஞ்சிகையினை கொழும்பு தடை செய்துள்ளது.

த எகொனொமிஸ்ற் சஞ்சிகையின் இம்மாத இதழினை கொழும்பு சுங்க பகுதி இலங்கைக்குள் வினியோகிக்க தடை செய்துள்ளது. இந்த மாத இதழில் இலங்கையின் போருக்கு பிந்திய புனர்வாழ்வு நடவடிக்கையும், அபிவிருத்தியும் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்து கட்டுரை வரையப்பட்டுள்ளது.இந்த கட்டுரைக்காகவே இந்த இதழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் நிலங்கள் பங்கீடு சிறுபான்மை மக்களினை புறக்கணித்தல்,எதிரணி எம்பிக்களை கைது செய்தல், பொலிசாரின் அராஜகம் ஆகியவற்றை விமர்சனம் செய்தும் இந்த கட்டுரை அமைந்து|ள்ளது.

இறுதியாக இந்த எகொனொமிஸ்ர் கட்டுரையில் , போரின் பின்னர் இலங்கை அபிவிருத்தி அடைந்தாலும் அங்கு ஜன நாயகம் என்பது தழைப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.