பேராசிரியர் இராமசாமியின் போர்குற்ற விசாரணை அறிவிப்பு – மஹிந்தவிற்கு தலையிடி- சிங்கள ஊடக ஆய்வு

இலங்கயின் போர்க்குற்ற விசாரணை பற்றி பலரும் பல வழிகளில் முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர். இதில் பான்கி மூன் அவர்களின் செயற்பாடானது பெரிதாக பாதிக்கப்போவது இல்லை என்றும் அது ஓர் அளவீடாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளன சிங்கள ஊடகக்ங்கள். மேலும் பான்கி மூனின் விசாரணைக்குழுவை ஓரளவு அங்கத்துவ நாடுகளின் உதவியுடன் தணிக்க முடியும் அல்லது ஏமாற்றவும் முடியும் என்பது இராஜபக்‌ஷக்களின் நம்பிக்கை.

அடுத்ததாக அண்மையில் 57 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு வழங்கிய அறிக்கையில், வேண்டுகையில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை அதுவும் சர்வதேச விசாரணை தேவை என கூறியுள்ளது. இந்த அறிக்கையும் சிறிது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது தான்.

இதனை விட பல தமிழர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணைக்கான போராட்டங்களை நடாத்தி வருகின்றன.

பேராசிரியர் இராமசாமியின் போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்பு

பேராசிரியர் இராமசாமியின் கட்சியான ஜனனாயக செயற்பாட்டு கட்சியானது இலங்கையின் போர்க்குற்ற விசாரணையினை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பு சாதாரணமானது அல்ல. இராமசாமியின் ஜனனாயக கட்சி மலேசியாவில் இரண்டாவது பெரிய கட்சி, சாதி சமையம், இனவாதம் கொண்ட கட்சி அல்ல. அது அனைத்து மலேசியர்களுக்குமான கட்சி ஆகும். தவிர அனைத்துலக சோசலிச கட்சிகளின் ஒன்றியத்திலும் பலமான கட்சியாக உள்ளது. ஆகவே அனைத்துலக ரீதியாக இராமசாமி அவர்களின் கட்சியின் பிரசன்னம் வேகமாகவே இருக்கும். இதனால் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்பினை மிகவும் வேகமாகவும் இறுக்கமாகவும் முன்னெடுக்க முடியும்.

இந்த கட்சியின் செயற்பாட்டினை மலேசிய அரசினாலோ அல்லது இந்திய மற்றும் தமிழ் நாட்டு அரசியல் செல்வாக்கினாலோ தடுத்து விட முடியாது. ஏன் அவர்களினால் செல்வாக்கு கூட செலுத்த முடியாது .

ஆகவே இத்தகைய கட்சியின் நடவடிக்கை இராஜபக்‌ஷக்களுக்கு ஓர் மிகப்பெரும் தலையிடியாகவே இருக்கும்.

இவ்வாறு ஆய்வு செய்துள்ளது சிங்கள ஊடகம்.

ஆகவேதான் இந்த விடயங்களை முறியடிக்க தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை மலேசியாவிற்கு புதிய தூதரக அதிகாரியாக அனுப்ப மஹிந்த திட்டம் தீட்டியுள்ளார். இவர் யாருமல்ல முன் நாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை ஆகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.