அனுருத்த ரத்வத்தை மலேசியாவிற்கான புதிய தூதர், பிரித்தானியாவிற்கு முன் நாள் கடற்படைத் தளபதி வசந்த கரண கொட

சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார்.

இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் முன் நாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட அவர்கள் பிரித்தானியாவிற்கான தூதராகவும் நியமனம் பெறவுள்ளார்.

ரதவத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உஅர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது. இதன் பின்னர் மலேசியாவிற்கு தூதராக ரத்வத்தை செல்வார்.

மலேசியாவில் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் பிரித்தானியாவிற்கு வர இருக்கும் வசந்த கரண கொடமீது மக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடியும் அல்லவா?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.