சுட்டுக் கொல்லப்பட்டவர்களைப் புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தித் தின்றன! தா. பாண்டியனுக்கு வந்திருக்கும் சுடலை ஞானம்

சுட்டுக் கொல்லப்பட்டவர்களைப் புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தித் தின்றன! தா. பாண்டியனுக்கு வந்திருக்கும் சுடலை ஞானம் தமிழ்நாட்டின் வேலூர் பிரதேசத்தின் சத்துவாச்சாரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்மாநில கட்டிட நிதி, கட்சி வளர்ப்பு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை.

4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். 2 வது உலகப் போரை விடவும் இது கொடூரமானது.

இந்திய ராணுவப் படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் 2 1/4 கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை.

நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.