சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒப்பந்தம். சுமார் 7.41 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது

தாயகப் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையில் பாதிப்படைந்த மருத்துவமனைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 7.41 பில்லியன் ரூபாய் நிதி ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்தர ரூபரு மற்றும் சீன நிறுவன தலைவர் யங் லைஜிங் ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மருத்துவமனைகளை புணரமைத்தல் மற்றும், அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.