யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக் குத்து

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் ஆண்டு கலைப்பீட மாணவர் ஒருவர் மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் அவசர சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் மன்னாரை சேர்ந்த 25 வயதான லக்ஸ்மன் என வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.