தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும் தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.

சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. இன்று சனிக்கிழமை அனைவரும் கூடுவோம் ஜெனீவா ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில்!

28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடங்குகின்றது.

நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்;கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கி நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்”; என்றார் எங்கள் திலீபன் அண்ணா. உலகத் தமிழ் உறவுகளே! அனைவரும் ஒன்று திரளுவோம்! நடைப்பயணத்தில் நம்மையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுவோம்;.

06.08.2010அன்று ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைத்துள்ளோம்.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன் இந்த நெடும் பயணம் முடிந்து விடக் கூடாது. இது இன்னம் nhடரவேண்டும். ஒரு மரதன் ஓட்டம் போல் இல்லாமல், ஒரு அஞ்சலோட்டமாக இதனை மாற்றவேண்டும். இதனை மாற்றம் வல்லமை இந்த முதலடியை எடுத்து வைத்துள்ள சிவந்தனுக்குரியது.

சிவந்தன் கையில் இருக்கும் நீதிக்கான கோரிக்கையை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்ததன் மூலம் சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு ஒரு வகையில் உற்சாகத்தை வழங்கி உதவி புரிந்த பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கி நீதி கேட்டு நடக்க வேண்டும்.

அங்கிருந்து இத்தனை அவலங்களுக்குப் பின்னரும் தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ள, போர்க் குற்றவாளியை தங்கள் நாட்டின் தூதுவராக அங்கீகரித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்திடமும், அங்கிருந்து நெதர்லாந்து நாடாளுமன்றம் நோக்கியும் நீதி கேட்டுச் செல்ல வேண்டும்.

கடந்த அறுபது வருடங்களாகத் தொடரும் இந்த இன அழிவுக்கும் தமிழ் மக்கள் இன்று தமது தாயகத்தை முழுமையாக இழந்து போகும் நிலைக்கும் காரணமாகிவிட்ட இலங்கைத் தீவிலிருந்த இரு நாடுகளை தங்கள் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைத்து ஆட்சி புரிந்துவிட்டு, அந்நாட்டைவிட்டு வெளியேறியபோது, ஒரே நாடாக்கி ஒரு இனத்தின் கையில் ஆட்சி ஒப்படைத்து விட்டுவந்த பிரித்தானிய முடியாட்சியிடம் நீதி கேட்டுச் செல்ல வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.