யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கத்திக்குத்துச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் தொடர்ச்சியாக நேற்றைய தின்ம் மற்றுமொரு கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபைக்குரிய பெண்கள் விடுதியின் காவலாளி மீதே இந்தக் கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மகளிர் விடுதிக்குள் பலவந்தமாகப் புகுவதற்கு முயற்சி செய்தவர்களைத் தடுத்த 65 வயதான லக்ஸ்மன் என்ற காவலாளி மீதே இந்தக் கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காவலாளி உயிரிழந்து விட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.