அன்னை தெரசா நாணயம் வெளியீடு

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறித்த  5 நாணயத்தை வெளியிட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

அன்னை தெரசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் அளித்தார் முகர்ஜி.

ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரசாவின் கையில் இருந்தது  5 மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார்.

நீல கறை கொண்ட வெள்ளை புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர்.

அன்னை தெரசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புகழாரம் சூட்டினார்.

1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி மாஸடோனியாவில் பிறந்த இவர், இந்தியாவில் குடியேறினார். மேற்கு வங்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.