ஜோன் ஹோல்ம்ஸ் ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் – கெஹெலிய றம்புக்வெல்ல

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரப் பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனித உரிமை மீறல் மற்றும் யுத்தம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வரும் நேரத்தில் ஜோன் ஹோல்ம்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குவதனை விட்டு விட்டு தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஜோன் ஹோல்ம்ஸ் அக்கறை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த றம்புக்வெல்ல இலங்கையின் நீதித் துறை சிறப்பான முறையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.