செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு செல்ல அனுமதி மறுப்பு

மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பகுதிக்குச் செல்ல படையினர் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம் மாங்குளம் ‐ முல்லைத்தீவு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இடை மறித்த படையினர் முல்லைத்தீவிற்குச் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் எனக் கூறியே இவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மீள் குடியேறிய மக்களின் நலன்கள் தொடர்பில் செயற்படும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.