வன்னியில் வீடுகள் அமைக்கும் பெறுப்பு இந்திய நிறுவனத்திடம்

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பொறுப்பு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள தமிழ்மக்களுக்கு இந்தியாவின் உதவியினால் அமைத்துக்கொடுக்கப்படவுள்ள ஜம்பதாயிரம் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதன் செயற்பாட்டினை இந்தியாவின் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கு அந்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சகல இடங்களுக்கும் சென்று பார்வையிடும் இவர்கள் முதற்கட்ட பணிகளை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.