உரிமைக்காய் கரம் சேர்ப்போம்

belgium1உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள்.

தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர்.

சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும்இ விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்றது.

உலகலாளவிய ரீதியில் தமிழீழத் தமிழர்கள் பரந்து வாழும் தேசமெங்கும் நடைபெறவிருக்கும் இவ் ‘உரிமைப் போர்’ இனில் பங்குபற்றத் தமிழர்கள் தங்கள் வேலைத்தளங்களுக்கு விடுப்பு எடுத்தும்இ மாணவர்கள் பாடசாலைகளை புறக்கணித்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

‘உரிமைப் போரிற்கு’ போர்முரசம் கொட்டி ஐரோப்பிய தமிழ் இளையோர்களால் ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றுகூட்டப்படுகிறார்கள்.

பெல்ஜியத்தின் தலைநகர் புருசெல்ஸ் நகரில் Gare du nord, bd albert II (2) தொடரூந்து நிலையத்தில் 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள இவ்வுரிமைப்போரில் அனைத்து ஐரோப்பியவாழ் தமிழ் உறவுகளையும் உரிமைக்காய் அணிதிரண்டு உரிமைப் போர் தொடுக்க ஐரோப்பியத் தமிழ் இளையோர் அழைக்கிறார்கள்.

தமிழீழ தேசத்தின் ஆக்கிரமிப்புத் தளையறுக்கவும்இ விடுதலையை வழிநடாத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கக் கோரியும் இவ் உரிமைப்போரினை முன்னெடுக்கின்றனர்.

இதே நேரம் சுவிற்சலாந்து வாழ் மக்கள் உலகின் தலைநகராம் ஐநாவை நோக்கி 2 மணிக்கு பேரணியாய் ‘சாவிலும் எழுவோம்’ என உரிமைக்காய் போர் தொடுக்கவுள்ளனர். ஐரோப்பிய மண்ணில் ஆரம்பிக்கும் இவ் உரிமைப் போரில் வடஅமெரிக்கா வாழ் தமிழீழ உறவுகளும் தம்மையும் இணைக்கவுள்ளனர்.

கனேடியத் தமிழ் மாணவர் சமூகமும்இ கனடியத் தமிழர் சமூகமும் ஒன்றிணைந்து ரொறன்ரோ மாநகரில் மாபெரும் மனிதச் சங்கிலியமைத்து ‘உரிமைப் போர்’ நடாத்த உள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணயத்தையும் அங்கீகரிக்கவும் தமிழரின் காவலர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே என்பதை உலகிற்கு உணர்த்தவும் மனிதச் சங்கிலியாய் மார்ச் 16 அன்று மதியம் 1 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒன்றுதிரளவுள்ளனர்.

தமிழீழ மக்கள் அவர்களது தாயக பூமியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது,

சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து அகற்றப்படவேண்டும்,

வன்னிவாழ் மக்களிற்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் உடனடியாகக் கிடைக்க வழிசெய்யவேண்டும்

ஆகியவற்றினை வலியுறுத்தி கனடியத் தமிழர் மற்றும் மாணவர் சமூகம் போர்முழக்கம் இடவுள்ளனர்.இவ்வாறே அமெரிக்கவாழ் தமிழ் மக்களால் 140 East 45th Street (between Third and Lexington Avenues) இல் அமைந்துள்ள அமெரிக்க அரசினது ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் திணைக்களத்தின் முன்னால் நண்பகல் 12 மணி தொடக்கம் மதியம் 3 மணிவரை உரிமைப் போர் முழங்கப்படவுள்ளது.

நிகழ்வுகளிற்கு ஏற்பாட்டாளார்களால் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.ஏதுமறியா பச்சிளம் பாலகர்கள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை துண்டாடும் சிங்களப் பேரினவாதத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து ஜனநாயகம் பேசும் இந்த உலகின் மனசாட்சியை உலுப்பும் வரை உரிமைப் போர் தொடரும்.

எனவே தமிழ் மக்களே அனைவரும் அணி திரளுங்கள் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.உரிமைப்போர் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட ஏற்பாட்டாளர்கள்இ ‘காலத்தின் தேவை அறிந்து தமிழீழ விடுதலையைப் பெற்றிட உலகெங்கும் உரிமைப்போர் தொடுத்து எம் மக்களின் இன்னல் துடைப்போம். தமிழீழ தேசத்தின் விடுதலையை உறுதிசெய்ய உலகெங்கும் உரிமைப் போர் முழக்கம் செய்வோம்.

எம் உறவுகள் வாழ்வினை உறுதிசெய்யஇ எம்மின விடுதலை இயக்கத்தினை அடையாளப்படுத்தி நாம் உலகெங்கும் தொடர்ந்து உரிமைப்போர் முழக்கம் செய்வோம்’ எனத் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.