இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் திடீரென கோத்தபாய இணந்ததன் நோக்கம் என்ன?

இந்தியாவிடனான பேச்சுவார்த்தையில் பசில் இராஜபக்‌ஷ மட்டுமே கலந்து கொள்வார் என கூறப்பட்டது. இதன்படி இந்தியா சார்பில் வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் பாதுகாப்பு ஆலோசகர் மேனன்,பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால் திடீரென கோத்தபாய அவர்கள் இரவு நடந்த கூட்டத்தில் அவரச அவசரமாக கலந்து கொண்டார். இவருடன் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறினாலும் ஆனால் இந்தியா கடல்பாதுகாப்பு மற்றும் சீன , அமெரிக்க பிரவேசம் குறித்தே கடுமையான தொனியில் பேசமுற்பட்டபோதே பசில் அவர்கள் கோத்தபாய அவர்களை அழைத்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக இந்தியா இவ்வாறு பேசும் என தெரிந்தே கோத்தபாய மற்றும் லலித் வீரதுங்கா ஆகியோர் இந்தியா போகாமல் இருந்தனர். பசில் ராஜபக்‌ஷவை விட்டு சமாளிப்போம் என்ற எண்ணப்பாட்டில் மஹ்ந்த இருந்தார். ஆனால் இந்தியாவின் அழுத்தங்களே இவர்களை அங்கு செல்ல வைத்தது என செய்திகள் கூறுகின்றன.

எனினும் தமிழர்கள் பிரச்சினை குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.