விண்ணில் கிரகங்கள் மோதிக்கொள்ளும் வாய்ப்பு

விண்ணில் அருகருகே சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்.எஸ் கேனம் வெனடிகோரம் என்ற இரண்டு நட்சத்திரங்களை சுற்றிவரும் இரண்டு கிரகங்கள் விரைவில் மோதும் அபாயம் உள்ளதை விளக்கும் கிராபிக்ஸ் படம்தான் இது.

கிரகங்கள் மோதி, விண்வெளியில் தூசு மண்டலம் ஏற்படுவது சகஜம் என்பதை நாசாவின் ஸ்பிட்சர் டெலஸ்கோப் ஆதாரங்களுடன் படம்பிடித்துள்ளது. இது போன்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ காற்று, தண்ணீர் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அதிகநாள் இங்கு மனிதன் வாழ முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.