ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ஜெனீவாவிலிருந்து மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடைபயணம்.

சுவிஸ் ஜெனீவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புருசல்ஸிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைபயணமொன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.

மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி முருகதாசன் திடலில் தனது பயணத்தின் கோலை விட்டுச்சென்றார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முருகதாசன் உட்பட 18 தியாகிகளின் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபயணம் ஆரம்பமானது. எதிர்வரும் 26.09.2010 அன்று தியாகதீபம் திலீபன்  நினைவு நாளன்று மூன்று ஈழ உணர்வாளர்களும் சென்றடைவர். இவர்கள் சென்றடைவதை முன்னிட்டு எதிர்வரும் 27.09.2010 புருசல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முன்பாக மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும் மனுக்கையளிப்பும்  இடம்பெறவுள்ளது.

•    இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

•    எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது  சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

•    மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

•    தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திரு. nஐகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய உணர்வாளர்களே இப்பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நடைபயணத்தை மேற்கொள்வோர் கேட்டுக்கொண்டதற்கமைய சுவிஸ் ஈழத்தமிழரவையால்  இந் நடைபயணம் ஒருங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தமாக 23 கி.மீ தூரத்தை கடந்து Nyon பிரதேசத்தை சென்றடைந்துள்ளனர்.

நாளை Nyon னிலிருந்து Morges வரை செல்லவுள்ளனர். அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இணைந்து நடந்து தமது ஆதரவை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஐரோப்பா வாழ் மக்களையும் இப்பணயத்திற்கான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு நாடுவாரியான ஈழத்தமிழரவைகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.