400 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு சும‌த்ரா‌வி‌ல் எ‌ரிமலை ‌‌சீ‌ற்ற‌ம்

இ‌ந்‌தோனே‌சியா‌ அருகே சும‌த்‌ரா ‌தீ‌வி‌ல் 400 ஆ‌‌ண்டுகளு‌க்கு ‌பிறகு முத‌ன் முறையாக ‌சினாபா‌த் எ‌ரிமலை ‌சீ‌ற்ற‌ம் அடைய‌த் தொட‌ங்‌கியு‌ள்ளதா‌‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் ‌வீடுகளை ‌வி‌ட்டு வெ‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சும‌‌த்ரா ‌தீ‌வி‌ல் உ‌ள்ள ‌சினாபா‌த் மலை‌யி‌ல் ந‌‌‌ள்‌ளிரவு நேர‌த்த‌ி‌ல் கரு‌‌ம்புகையுட‌ன் ‌தீ‌ப்‌பிழ‌ப்புக‌ள் வெ‌ளிவர‌த் தொட‌ங்‌கியது. க‌ட‌ந்த 1600 ஆ‌‌ண்டு‌க்கு ‌பிறகு இ‌ம்மலை‌யி‌ல் இரு‌ந்து எ‌ரிமலை வெடி‌க்காதத‌ா‌ல் க‌ண்கா‌ணி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டதாக எ‌ரிமலை ஆ‌‌ய்ரா‌ச்‌‌சியா‌ள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல் த‌ற்போது எ‌ரிமலை ‌தீ‌ப்‌பிழ‌ப்புக‌‌ள் ம‌ற்று‌ம் சா‌ம்பலை பரவ‌‌ச் செ‌ய்வதா‌ல் சு‌ற்று‌ப்புற ‌கிராம‌‌ங்களு‌க்கு ஆப‌த்து‌ ஏ‌ற்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்து ‌சினாபா‌த் ‌எ‌ரிமலையை சு‌ற்‌றியு‌ள்ள ‌கிராம‌‌ங்களை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ‌‌‌வீடுகளை ‌வி‌ட்டு அவசர அவசரமாக வெ‌ளியே‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

எ‌‌ரிமலை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளிவரு‌ம் சா‌ம்பலா‌ல் சுவாச கோளாறு ஏ‌ற்படுவதை தடு‌க்க முக‌‌க்கவசம் அ‌‌ணியுமாறு இ‌ந்தோனே‌‌சிய அரசு கூ‌றியு‌ள்ளது.

‌சினாபா‌த் எ‌ரிமலையை வ‌ல்லுந‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்தோனே‌சியா‌வி‌ல் மொ‌‌த்தமு‌ள்ள 130 எ‌ரிமலை‌க‌ளி‌ல் 65 அ‌திக ‌சீ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்படுவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.