மலேசியாவில் இலங்கையர் மூவர் கடத்தல்! அவர்களில் இருவர் உயிருடன் மீட்பு

மலேசியாவில் இலங்கையர் மூவர் கப்பம் கோரிக் கடத்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் கடத்தல்காரர்களால் சித்திரவதைகள் செய்யப்பட்டு உயிர் இழந்துள்ளார்.

ஏனைய இருவரும் பொலிஸாரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பொலிஸார் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்தை நேற்று இரவு சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இருவரை மாத்திரம் உயிருடன் காப்பாற்ற முடிந்தது. இக்கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியும், சூத்திரதாரியின் சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரி ஒரு ரிசேர்வ் பொலிஸ் ஆவார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.