கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்

சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வங்காள தேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 முதல் 8 மாத கர்ப்பிணிகள் 720 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது அவர்களில் பலர் வறுமை, குடும்ப பிரச்சினை போன்ற பலவித சூழ் நிலைகளால் மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருந்தனர். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

அவர்களில் மன கவலையுடன் இருந்த கர்ப்பிணி களுக்கு மிகவும் எடை குறைந்த குழந்தைகள் பிறந்து இருந்தன. இவ்வாறு பிறந்த குழந்தைகள் இறந்தன.

எனவே கர்ப்பகாலத்தின் போது பெண்கள் மனக்கவலை எதுவுமின்றி மகிழ்ச்சியாக இருந்தால்தான் ஆரோக்கியமான அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.