அரசுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயார்

நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றினை எட்டும் விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் அரசுடன் இணைந்து செயற்படவும் தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்த சுமந்திரன் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை அரசாங்கம் முன்வைக்குமிடத்து அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர் சமஷ்டி முறைமையிலான ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானதாக அமையும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.