“ஐபாட்’களை (ipod) தொடர்ந்து பயன்படுத்தினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை

ஐபாட்’களை அதிகம்பயன்படுத்துவதால், இளைஞர்களுக்கு காதுக் கோளாறுஏற்படுவதாக அமெரிக்காவில் நடத்திய ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ கழகத்தால் நடத்தப்படும் பத்திரிகையில், ஐபாட், வாக்மேன் போன்ற கருவிகளைகாதில் பொருத்தி கொள்வதால் ஏற்படும் விளைவுகள்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு பற்றியசெய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க மருத்துவ கழகத்தின் உதவியுடன் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990லிருந்து,நீண்ட கால ஆய்வாக இதுநடத்தப்பட்டது. “ஐபாட்’பயன்படுத்தும் 12 வயதில்இருந்து 19 வயதுக்குட்பட்ட “டீன்-ஏஜ்’ பருவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

முதல் கட்ட ஆய்வில்,”ஐபாட்’ போன்ற கருவிகளை காதில் பொருத்தி,பாட்டுக் கேட்கும் இளைஞர்களில் 15 சதவீதம்பேருக்கு காது பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.இரண்டாம் கட்ட ஆய்வில், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 20 சதவீதம் பேருக்குகாதில் பாதிப்பு ஏற்பட்டு,அவர்களின் கேட்கும் திறன்குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஸ்டனில்உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஜோசப் கூறியதாவது:”ஐபாட்’களைதொடர்ந்து பயன்படுத்தும்இளைஞர்களுக்கு, ஆரம்பத்தில் தங்கள் காதில்பிரச்னை ஏற்படுவது தெரியாது. சில காலம் கழித்து தான்இதை உணர முடியும். குறிப்பாக, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர் கூறுவதை பின்பற்ற முடியாமல்திணறும் சூழ்நிலை ஏற்படும்.

இதனால், அவர்களின்கற்கும் திறன் பாதிக்கப்படும். “ஐபாட்’டைதொடர்ந்து பயன்படுத்துவதால், எத்தகைய விளைவுஏற்படும் என்பதை, தற்போதுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஜோசப் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.