15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது

மன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக கத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் பஸ்ஸிற்காக காத்திருந்த குறித்த சிறுமியை 3 இளைஞர்கள் பலவந்தமாக, அருகாமையிலுள்ள பொது மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதுடன் அச்சிறுமியை கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

அப்போது குறித்த சிறுமி சத்தமிட்டதை அடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க, பொலிஸாரும் அவ்விடத்துக்கு விரைந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் சமபவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு இளைஞரையும் சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து கைது செய்துள்ளனர்.

மேற்படி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.