ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு எதிர்வரும் செப்டம்பர் மாதம் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கூடி ஆராயவுள்ளது.

இந்த நிபுணர்கள் குழு நியூயோர்க்கில் கூட உள்ளதாகவும், அமர்வுகள் நடைபெறவுள்ள இறுதித் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி முதல் தடவையாக இந்த நிபுணர்கள் குழு இலங்கை விவகாரம் குறித்த அமர்வுகளை நடத்தியிருந்தது.
 
நான்கு மாதங்களுக்குள் இந்தக் குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலளார் பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேவேளை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இராஜதந்திரிகள் கலந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.