கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் 5651 பேர் காணாமர்ப்போயுள்ளனர்!

அரசியல் காரணங்களின் பின்னணியில் கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் 5651 பேர் வரை காணாமல் போய் உள்ளார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

காணாமல் போதல்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் உலக நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் அது சுட்டிக்காட்டி உள்ளது.

அக்காலப் பகுதியில் ஈராக்கில் 16409 பேர் வரை காணாமல் போயிருக்கின்றது என்றும் எனவே காணாமல் போதல்கள் மிக அதிகமாக இடம்பெற்றிருக்கும் நாடு ஈராக்தான் என்றும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

ஆர்ஜன்டீனாவில் 3290 பேரும், அல்ஜீரியாவில் 2912 பேரும், கௌதமாலாவில் 2899 பேரும்,பேருவில் 2371 பேரும், எல் சல்வடோரில் 2270 பேரும்,கொலம்பியாவில் 963 பேரும், சிலியில் 807 பேரும், பிலிப்பைன்ஸில் 619 பேரும் கடந்த வருடம் காணாமல் போயுள்ளார்கள் என்று சபை அறிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.