அரசியல் சாசன திருத்த யோசனை விரைவில் பாராளுமன்றத்தில்

அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த யோசனை எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.

இன்றைய தினம் இந்த திருத்தங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையிலேயே பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான தினம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

160 உறுப்பினர்கள் வரையில் இந்தச் சட்டமூலத்தை ஆதரிப்பர் எனத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் பல உறுப்பினர்கள் இந்தச் சட்டமூலத்தை ஆதரிப்பர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.