தம்மை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் வேண்டுகோள்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2005ம் ஆண்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தம்மை முழுமையாக விடுதலை செய்யாவிட்டாலும் பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநாச்சி, மட்டக்களப்பு,  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் தம்மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதாகவும் எனினும் அரச தரப்பிலிருந்து வாக்குறுதிகள் மட்டுமே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் செயல்கள் எதனையும் காணவில்லை எனவும் அரசியல் கைதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.