முஸ்லீம் காங்கிரஸின் முடிவு ஒரு அரசியல் பேரழிவு: மனோ கணேசன்

சிறீலங்கா அரசுக்கு ஆதரவு வழங்குவது என முஸ்லீம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஒரு அரசியல் பேரழிவு என ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லீம் காங்கிரஸ் மேற்கொண்ட முடிவு மிகவும் கலைக்குரியது, அது ஒரு அரசியல் பேரழிவு. அந்த கட்சி இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை தொடர்பில் நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

அவர்களை சமாதனப்படுத்த நான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன், ஆனால் அது பயன்தரவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக மேற்கொண்ட முடிவு இது. அவர்களின் பாதையை தெரிவுசெய்யும் உரிமை அவர்களுக்குண்டு.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி இது தொடர்பில் கவனம் எடுத்து, வலுவான எதிர்க்கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரித்தள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.