தமிழீழ தேசத்தை காலால் மிரித்து; ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் வீடு!! – ஆடு தம்பி ஆடு; அடக்குகிறவன் எழும் வரை!!!

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.