கத்தியால் குத்தி மனைவியை கொல்ல முயன்ற இலங்கையர் இத்தாலியில் கைது!

43 வயது உடைய இலங்கையர் ஒருவர் அவரின் 37 வயது மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்ய முயன்றமைக்காக இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Brescia நகரில் உள்ள வீடு ஒன்றில் குடும்பமாக வாழ்ந்து வரும் இந்நபர் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு சென்று மனைவியைத் தாக்கி உள்ளார். அத்துடன் கத்தி ஒன்றால் குத்தியும் கொல்ல முயன்றார். ஆயுனும் மனைவி சுதாகரித்துக்கொண்டு தப்பி ஓடி அவர்களுடைய வீட்டின் அறை ஒன்றுக்குள் புகுந்து கதவை தாள்ப்பாள் இட்டுக் கொண்டார்.

அவர் அவசர தொலைபெசி இலக்கத்தில் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். உடனடியாக அங்கு வந்து சேர்ந்த பொலிஸார் அந்நபரைக் கைது செய்தனர். இத்தம்பதிகளுக்கு இடையில் நீண்டகாலமாக சண்டை, சச்சரவுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் கணவர் முன்பும் மனைவியைக் கொல்ல முயன்றிருக்கின்றார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்படுகொலை முயற்சி இடம்பெற்றபோது தம்பதிகளின் பிள்ளைகளான 18 வயது இளைஞனும், 14 வயதுச் சிறுவனும், தம்பதிகளின் மருமகன் ஒருவரும்,மனைவியின் நண்பி ஒருவரும் அவ்வீட்டில் இருந்திருக்கின்றார்கள்.சம்பவத்தை நேரில் பார்த்தும் இருக்கின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.