அகதிகளை ஆஸி ஒழுங்காக நடத்துவது இல்லை! ஐ.நாவின் இனரீதியான பாரபட்சங்களுக்கு எதிரான குழு அறிவிப்பு

இலங்கை உட்பட வெளிநாடுகளில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி வரும் அகதிகளை ஆஸ்திரேலியா ஒழுங்கு முறையாக நடத்துவது கிடையாது என்று ஐ.நாவின் இனரீதியான பாரபட்சங்களுக்கு எதிரான குழு அறிவித்துள்ளது.

அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கூடிய வகையில் ஆஸியின் அரசமைப்பு இல்லை என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடல் வழியாக வரும் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை ஆஸி இடை நிறுத்தி வைத்ததையும், இந்த அகதிகளை சிறையில் அடைத்து நடத்தும் முறையையும் இக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.