அரசியலமைப்பு திருத்தம் குறித்து த.தே.கூட்டமைப்புடன் கலந்துரையாடப்படவில்லை

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். 

இவ்விடயத்தில் தமிழ் மக்களை ஊக்குவிக்க அரசு தயார் இல்லை என விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தமது கட்சிக்கு இந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எதுவும் தெரியாது என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

“ஏனைய கட்சிகளுக்கு தெரிவித்தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எமக்கு எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தின் போது அரசுக்கு  தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என்பது இதன் அர்த்தமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.