கிழக்கு நிலiமைகள் குறித்து ஐ.நா குழுவினர் நேரில் கண்காணிப்பு நடத்தி உள்ளனர்

கிழக்கின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட குழுவினர் நேரில் கண்காணிப்பு நடத்தியுள்ளனர்.
 
யுத்தம் நிறைவடைந்து ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில் கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுள் அதிகாரிகள் குழு கண்காணிப்பு நடத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசங்களுக்குச் சென்று இந்த கண்காணிப்புப் பணி நடத்தப்பட்டுள்ளது.
 
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணத்தில் பணிகளை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் தொடர்பிலும் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.
 
உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.