இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லாமல் நாட்டிற்கு விமோசனம் இல்லை – ஜெ.சிறிரங்கா

இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நாட்டிற்கு விமோசனம் கிடையாது என நுவரெலிய மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சிறிரங்கா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் இந்தப் பிரச்சினை காரணமாக நாட்டின் வளங்களை பல்வேறு நாடுகளும் சுரண்டி வருவதாகத் தெரிவித்த சிறிரங்கா உலகின் பல நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதாக காட்டிக் கொண்ட போதிலும், அநேக நாடுகள் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிக் குறிப்பிட்ட சிறிரங்கா ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி அமைப்பது அல்லது ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீடிப்பது சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அமையாது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.