பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி

பலாலி விமான நிலையம் மற்றம் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது.

கடந்த காலங்களில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.