நவநீதம்பிள்ளைக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒருபோதும் நம்பவில்லையாம்

e0aeaae0aebee0aeb2e0aebfe0aea4-e0ae95e0af8be0aeb9e0aea3மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் ஒருபோதும் நம்பவில்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண புலிகளுக்கு ஆதரவான சக்திகள் அவரைத் தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவா தலைமையகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கையானது,ஒரு தலைப்பட்சமானதாகவே நோக்கப்படவேண்டியதாகும்.

ஒரு தரப்பினரின் தகவலை மையமாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் அவர் இலங்கை அரசுடனோ, அல்லது ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியிடமோ கலந்துரையாடியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யாமல் பக்கச்சார்பான விதத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதனை வைத்துக்கொண்டு நாம் அவரை புலிகளுக்குச்சார்பானவரென்றோ, புலிகளுடன் தொடர்புள்ளவரென்றோ கூறமுட்படமாட்டோம். புலிகளுடன் தொடர்புடையவர்களும் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் நவநீதம் பிள்ளையை தவறாக வழிநடத்தியிருப்பதாகவே நோக்குகின்றோம்.

இதன் மூலம் தனது பதவிக்கும், ஐ.நா. மனித உரிமைகள் செலயகத்துக்கும் அபகீர்த்தியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.